வனக்காவலர் பணி: இன்று ஆன்லைன் தேர்வு

வனக்காவலர் பணி: இன்று ஆன்லைன் தேர்வு

தமிழகத்தில் நடைபெற்ற வனக்காவலர் பணியிடங்களுக்கான ஆன்லைன் தேர்வை ஏராளமானோர் எழுதினர்.

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பத்தவர்களில் ஒரு பகுதியினர் நேற்று சென்னையில் உள்ள நந்தனம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மையங்களில் தேர்வு எழுதினர்.

இந்த தேர்வை மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வன சரகர்கள் தேர்வு நடைமுறைகளை மேற்பார்வையிட்டனர்.

இந்நிலையில் விண்ணப்பித்தவர்களில் ஒரு பகுதியினர் நேற்று தேர்வு எழுதிய நிலையில், மற்றவர்களுக்கு இன்று அதாவது அக்டோபர் 6-ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

Leave a Reply