shadow

வடக்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுநிலை: இன்றுடன் முடிகிறது மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்வதால் சென்னை உள்பட தமிழகத்தில் இன்றுடன் கனமழை முடிவடைவதாகவும், படிப்படியாக தமிழகத்தில் மழை குறைய ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் போதுமான அளவு நிரம்பியுள்ளது.

இந்த நிலையில் இன்றுடன் கனமழை நிறைவடைவதாகவும், சென்னை உள்பட தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்து ஓரிரு நாட்களில் மழை முழுவதுமாக நின்றுவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இன்று சென்னையை பொருத்தவரையில் விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்றும் அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *