வங்கதேசத்துக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

நன்றாக விளையாடியும் இந்திய அணியில் நதீமுக்கு இடமில்லையா?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியில் புதியதாக களமிறங்கிய பந்துவீச்சாளர் நதீம் அபாரமாக பந்துவீசி நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதனையடுத்து அவருக்கு வங்கதேச தொடரிலும் வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டது. ஆனால் இன்று வெளியாகியுள்ள வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் நதீம் பெயர் இல்லை.

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:

விராத் கோஹ்லி, ரோஹித்சர்மா, மயாங்க் அகர்வால், புஜாரே, ரஹானே, விஹாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, கில், ரிஷப் பண்ட்,

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விபரம் வருமாறு:

ரோஹித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருணால் பாண்ட்யா, சாஹல், ராகுல் சஹார், தீபக் சஹார், கலீல் அகம்து, ஷிவம் டுபே, ஷர்துல் தாக்கூர்,

டி20 தொடரில் விராத் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார்

Leave a Reply