வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு: அதீத கன மழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்பட வங்கக்கடலோர மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வட மேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சட்டீஸ்கர் வழியாக நகர்ந்தால் கேரளாவில் அதீத கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply