வங்கக்கடலில் 50கிமீ வேகத்தில் காற்று: மீனவர்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள மலைபகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

மேலும் அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு என்றும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply