லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை எதிரொலி: ஓபிஎஸ் இபிஎஸ்-ஐ அவசரமாக சந்தித்த வேலுமணி

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என அதிரடியாக சோதனை செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வேலுமணி உள்பட 17 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின

இந்த நிலையில் சோதனைக்கு பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தனித்தனியாக சந்தித்து ஆலோசனை செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது