ரோஹித், விராத் அபாரம்: 323 இலக்கை அசால்ட்டாக அடைந்த இந்தியா

ரோஹித், விராத் அபாரம்: 323 இலக்கை அசால்ட்டாக அடைந்த இந்தியா

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 323 என்ற இலக்கை மிக எளிதில் அடைந்து வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ரன்கள் குவித்தது. ஹெட்மியர் 106 ரன்களும், பவல் 51 ரன்களும் எடுத்தனர்.

323 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே தவான் விக்கெட்டை இழந்தாலும் அதன் பின்னர் ரோஹித் , விராத் அபார ஆட்டத்தால் 42.1 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது. ரோஹித் சர்மா 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராத் கோஹ்லி 140 ரன்கள் குவித்தார்.

விராத் கோஹ்லி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி வரும் 27ஆம் தேதி புனே நகரில் நடைபெறவுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.