ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதள முகவரியை அறிவித்த தமிழக அரசு!

கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில். நேரு ஸ்டேடியத்தில் குவிந்த நிலையில் தற்போது ஆன்லைன் மூலம் தனியார் மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் மருந்து அனுப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இதற்காக தமிழக அரசு பிரத்தியேகமாக ஒரு இணையதள முகவரியை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையை குறித்து இந்த இணையதளத்தில் பதிவு செய்தால் நேரடியாக தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு ரெம்டெசிவிர் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.