ரூ.30 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

ரூ.30 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே உள்ளது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக இம்மாதம் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சவரன் ஒன்றுக்கு ரூ.3336 உயர்ந்துள்ளது. இன்று மட்டும் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்களுக்கு கவலையாகவும், தங்கத்தை சேமித்து வைத்தவர்கள் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை சவரன் ஒன்றுக்கு ரூ.29,816 என விற்பனை ஆகி வருகின்றது. கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.984 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.