shadow

ரூ.10 கோடிக்கு விலைபோன ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்பு

ஜெர்மனியை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்பு பேப்பர் ஒன்று சமீபத்தில் ஏலம் போனது. இரண்டு துண்டுகளான இந்த குறிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 கோடிக்கு ஏலம் போனது

கடந்த 1922ஆம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஜப்பானுக்க்கு சென்றபோது தான் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்பது குறித்து குறிப்பு ஒன்றை எழுதி அதை அங்கிருந்த ஒருவருக்கு பரிசளித்தார்.

இந்த குறிப்பு பேப்பர் பல நபர்களிடம் மாறி மாறி வந்து தற்போது ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த குறிப்பு பேப்பரை ரூ.10 கோடி கொடுத்து ஐரோப்பாவை சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.

Leave a Reply