ரியல் ஹீரோவுக்கு சிலை வைத்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

கொரனோ காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் சோனு சூட் அவர்களுக்கு ஆளுயர சிலை வைத்து மக்கள் வழிபட்டு அசத்தியுள்ளனர்

கொல்கத்தாவில் துர்கா பூஜை நடைபெற்று வரும் நிலையில் சிலைகள் வைத்து கொண்டாடுவது வழக்கமான ஒன்றே

இந்த முறை வித்தியாசமாக, கொரோனா காலத்தில் உதவிய நடிகர் சோனு சூட் மற்றும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பட்ட கஷ்டங்கள் குறித்த சிலைகளை வைத்து கொல்கத்தா மக்கள் அசத்தியுள்ளனர்

இந்த சிலைகள் குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply