ரான்சம்வேர் வைரஸ்களை பரப்பியது வடகொரியாவா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

ரான்சம்வேர் வைரஸ்களை பரப்பியது வடகொரியாவா? அமெரிக்கா அதிர்ச்சி தகவல்


கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகையே அச்சுறுத்திய கம்ப்யூட்டர் வைரஸ் ரான்சம்வேர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸ் வான்னாக்ரை’ என்றஹேக்கிங் குழுவினர்களால் இ-மெயில் மூலம் அனுப்பப்படும். இந்த ஹேக்கிங் மால்வேரை கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது. அதன்பின்னர் ஹேக்கர்கள் அந்த நபரை மிரட்டி பணம் பெற்று வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இணைய உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கிய இந்த வைரஸானது வடகொரியா மூலம் உருவாக்கப்பட்டதற்கான பல குறியீடுகள் காணப்படுவதாக காஸ்பஸ்கை உள்ளிட்ட பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனங்கள் கூறியிருந்தது. லாசரஸ் குரூப் எனப்படும் பிரபல சைபர் கிரைம் குழு கடந்த 2014ம் ஆண்டு சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களையும், 2016-ம் ஆண்டில் வங்காளதேசத்தை சேர்ந்த வங்கிகளின் கணினிகளை ஹாக் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டாம் போஸ்ஸெர்ட், ‘வான்னாகிரை’ தாக்குதலுக்கு வட கொரியாவே பொறுப்பு என்று கூறியுள்ளார். பல ஆண்டுகளாக வடகொரியா மொசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் தீங்கிழைக்கும் நடத்தை மிகவும் அதிர்ச்சிக்குரியதாக இருப்பதாக டாம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply