ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நடிகை நயன்தாரா குறித்து தரக்குறைவாக வகையில் விமர்சனம் செய்த நடிகர் ராதாரவியை ஏற்கனவே திமுக சஸ்பெண்ட் செய்த நிலையில் தற்போது ராதாரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியவதாவது:

பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி அவர்களின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *