ராணுவ அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் எம்பி: அதிர்ச்சி தகவல்

ராணுவ அதிகாரி மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் எம்பி: அதிர்ச்சி தகவல்

உலகெங்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கும் நிலையில் பெண் எம்பி ஒருவரை ராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வெளிவந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அமெரிக்க பாராளுமன்றத்தில் அரிசோனா மாகாணத்தில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் மார்தாமெக்சலி என்ற பெண். இவர் ஏற்கனவே அமெரிக்க விமானப்படையில் 26 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2010-ல் ஓய்வு பெற்ற இவர் ஓய்வுக்கு பின் அரசியலில் குதித்தார். இந்த் நிலையில் நிகழ்ச்சி ஒன்றுல் பேசிய மார்தாமெக்சலி அமெரிக்க ராணுவத்தில் இருந்தபோது தனக்கும் செக்ஸ் தொல்லை நடந்ததாகவும், விமானப்படையில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாகவும் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்கவில்லை என்றும், ஆயுதப்படைகளில் இது போல நடக்கும் தவறுகளை தடுக்க வேண்டும் என்றும் கூறினார். மார்தாமெக்சலியின் இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply