ராட்சசி திரைப்படத்திற்கு எதிராக போலீஸ் புகார்

ஜோதிகா நடித்த ராட்சசி திரைப்படத்துக்கு எதிராக போலீஸ் புகார் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது. இருப்பினும் அரசு பள்ளி ஆசிரியர்கள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் ராட்சசி திரைப்படத்திற்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் இந்தப் படம் அரசு பள்ளி ஆசிரியர்களை தரம் தாழ்த்தியும் தனியார் பள்ளியை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

Leave a Reply