ராட்சசன்’ படத்தை அடுத்து ‘ராட்சசி’: யார் நடித்துள்ளார் தெரியுமா?

கடந்த ஆண்டு விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த ‘ராட்சசன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ‘ராட்சசி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராட்சசி’ படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா ஜெயராமன், சத்யன், ஹரீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜோதிகா ஏற்கனவே ‘குலேபகாவலி’ இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ரேவதி முக்கிய நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply