ராஜ்தாக்கரேவிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

ப.சிதம்பரம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியோர்களால் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில் அடுத்த அதிரடியாக மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷியின் மகன் உன்மேஷ் தொடங்கிய ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவன முதலீட்டில், 450 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு ராஜ்தாக்கரேவிடம் விசாரிக்கப்பட உள்ளது.

இதனிடையே, ராஜ் தாக்கரேவின் உறவினரும், சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே இதற்கு எதிப்பு தெரிவித்துள்ளார். இருவரும் எதிரெதிர் துருவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply