shadow

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சோனியாவுக்கு கடிதம் எழுதிய நீதிபதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி, குற்றவாளிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய சோனியா காந்தி உதவ வேண்டும் என்று நீதிபதி தாமஸ் கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையில் கழித்து விட்டனர். எனவே அவர்களின் தண்டனையை குறைப்பதற்கு (விடுதலை செய்வதற்கு) நீங்களும், ராகுல் காந்தியும் (முடியுமானால் பிரியங்காவும் கூட) உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினால், அதை அனேகமாக மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்.

நீங்கள் மட்டுமே காட்டுகிற மனித நேயமாக இந்த உதவி அமையும் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தண்டனை விதித்த நீதிபதி என்ற வகையில், இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதவேண்டும் என்று உணர்கிறேன். எனவே நீங்கள், இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்.

இந்த கைதிகளுக்கு கருணை காட்டுவதின் மூலம்தான் சர்வ வல்லமை படைத்த கடவுளும் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு இந்த வேண்டுகோளை நான் விடுப்பதின்மூலம் நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னித்து விடுங்கள்.

இவ்வாறு நீதிபதி தாமஸ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply