ராஜினாமாவை திடீரென திரும்ப பெற்ற எம்.எல்.ஏ

ராஜினாமாவை திடீரென திரும்ப பெற்ற எம்.எல்.ஏ

அசாம் மாநிலத்தில் உள்ள துலியாஜன் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேராஷ் கோவல்லா என்ற ஆளும் பாஜக எம்எல்ஏ தன் கடமைகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். மேலும் முதல்வர் சர்பானந்த சோனாவலுக்கு தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பினார்.

இந்த நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை தோராஷ் திடீரென திரும்ப பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘‘நேற்று இரவு முதல்வர் என்னை அழைத்து பேசினார். அப்போது, பல்வேறு சமூகங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதால் இந்த பணி நியமனத்தில் உள்ள சிக்கல்கள் இருந்ததாக முதல்வர் விளக்கினார். எனது கவலைகளை ஏற்றுக்கொண்ட அவர், எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அவர் கேட்டுக்கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். இது தொடர்பாக அவருக்கு மெயில் அனுப்பி உள்ளேன்’ என்றார்.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பாமல் முதல்வருக்கு அனுப்பி தோரஷ் ராஜினாமா நாடகம் ஆடியதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.