ராஜஸ்தானில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: ராகுல் காந்தி இதுக்கெல்லாம் போக மாட்டாரா?

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் பொங்கி எழுந்தனர்

ஆனால் அதே நேரத்தில் நாட்டில் பல இடங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் திடீரென காணாமல் போன இளம்பெண் ஒருவர் தற்போது காவல் நிலையத்திற்கு வந்து தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளதாக புகார் கொடுத்துள்ளார்

அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உபி பாலியல் விவகாரத்துக்கு பொங்கிய ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரியங்கா காந்தியை அரசியலில் முன்னிறுத்தவே அம்மாநிலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ராகுல்காந்தி முக்கியத்துவம் கொடுப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது

Leave a Reply