ராஜகோபாலன் போன்ற ஆசிரியர்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும்: பிக்பாஸ் ஆரி

ஆசிரியர் ராஜகோபாலன் போன்றவர்களை சூரசம்ஹாரம் செய்ய வேண்டுமென பிக்பாஸ் ஆரி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ஆரி, தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஆசிரியர் போர்வையில்
பள்ளி குழந்தைகளுக்கு
பாலியல் துன்புறுத்தல்கள் செய்பவர்களை சூரசம்ஹாரம் செய்வோம். ராஜகோபாலன் போன்றோருக்கு சட்டப்படி
எடுக்கும் நடவடிக்கை
இது போன்றோருக்கு
பாடமாக இருக்கட்டும்.