ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்!

ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை சென்ற காங்கிரஸ் எம்பி திடீர் மரணம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடைபயணத்தில் திடீரென காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா என்ற பகுதியில் நடை பயணம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அவருடன் நடை பயணம் சென்ற காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி என்பவர் திடீரென காலமானார். அவர் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி நடைபயணத்தில் சென்ற எம்பி ஒரு திடீரென உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது