ராகுலை அடுத்து மீண்டும் சோனியா காந்தி! காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியா?

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து புதிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியும், 2014ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்த நிலையில் தற்போது மீண்டும் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் ஆகியுள்ளதால் காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காங்கிரஸ், திமுக உள்பட பல கட்சிகளில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே தலைவர் பதவியை பெற்று வருவது அக்கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply