ரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி விபத்தில் பலி:

ரஷ்யாவின் 4வது பணக்கார பெண்மணி ஒருவர் ஜெர்மனியில் நடந்த விமான விபத்து ஒன்றில் பரிதாபமாக பலியானார். 

ஆறு இருக்கைகள் கொண்ட ரஷ்யன் ஏர்லைன் எஸ் 7 என்ற சிறிய விமானம் ஒன்று நேற்று பயணிகளுடன் பிரான்சிலிருந்து பிராங்க்பர்டில் உள்ள ஈஜல்ஸ்பாக் நோக்கி சென்றது. பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக விமானம் முயற்சித்தபோது, திடீரென கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் எஸ்7 ஏர்லைன் பங்குதாரரான நட்டாலியா பைலிவா, விமானி மற்றும் ஒரு பயணி உயிரிழந்தனர். உயிரிழந்த நட்டாலியா போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் ரஷ்யாவின் 4வது பெண் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply