ரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்

ரயில் டாய்லெட் தண்ணீரை பாலுடன் கலந்த கடைக்காரர்: உடனடி நடவடிக்கை எடுத்த ரயில்வே நிர்வாகம்

ரயிலில் உள்ள டாய்லெட் தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றிய கடைக்காரர் ஒருவர் மீது ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையமொன்றில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் ரயிலில் உள்ள டாய்லெட்டில் இருந்து தண்ணீரை பிடித்து பாலில் ஊற்றுவது போன்ற வீடியோ ஒன்றை ரயில் பயணி ஒருவர் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோவை அவர் ரயில்வே துறைக்கும் அவர் பகிர்ந்திருந்தார்

இந்த வீடியோவை பார்த்த ரயில்வே நிர்வாகம் உடனடியாக அந்த கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் டாய்லெட் தண்ணீரை கடைக்காரர் பாலில் ஊற்றவில்லை என்றும், பாய்லரில் தான் ஊற்றியதாகவும், பாலில் அந்த தண்ணீர் கலக்க வாய்ப்பு இல்லை என்றும் ரயில்வே நிர்வாகம் பதிலளித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் ரயில்வே நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply