ரயிலில் மோதி கடற்கரை யானை உயிரிழப்பு!

சமீபத்தில் கோவை அருகே உள்ள நவகரையில் ரயிலில் அடிபட்டு ஆண் யானை ஒன்று படுகாயமடைந்தது

இதனை அடுத்து அந்த யானைக்கு சம்பவ இடத்திலேயே தற்காலிக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

அந்த யானையின் தந்தம் முழுவதும் சேதம் அடைந்து விட்டதாகவும் யானை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் இதனால் அந்த பகுதியினர் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply