ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்

கண்டுபிடித்த காவல்துறை

நடிகர் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவரது வீட்டை வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினர்களும் முழுமையாக சோதனை செய்தனர்.

ஆனால் சோதனைக்கு பின் ரஜினி வீட்டில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply