சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று திடீரென ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவிருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கப்போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்றும், கட்சி தொடங்குவது தொடர்பாக எந்த வீடியோவையும் இன்று அவர் வெளியிடப்போவதில்லை என்றும் சற்றுமுன் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் மிக விரைவில் கட்சி குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply