ரஜினி வரும்போது இதைவிடப் பெரிய சலசலப்பு இருக்கும்: சீமான்

ரஜினி வரும்போது இதைவிடப் பெரிய சலசலப்பு இருக்கும்: சீமான்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் கடந்த் தேர்தலை விட இந்த தேர்தலில் அதிக் வாக்குசதவிகிதத்தை பெற்ற கட்சி சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து சீமான் கூறியதாவது:

“தேர்தலில் அவருடைய பங்களிப்பு என்று எதுவும் இல்லை. திரைப்படத்தைப் போலவேதான் அரசியலையும் பார்க்கிறார். 50 வருடம் நடித்திருக்கிறார். என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அவரை ஒரு பெர்சனாலிட்டியாகப் பார்ப்பவர்கள்தான் அதிகம்.

நாங்கள் உழைக்கும் மக்கள். எங்களை அழுக்கு மனிதர்களாகப் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இதே தோல்வியை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பாரா எனத் தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் நான் தனித்துப் போட்டியிடுவேன். 117 இடங்களை ஆண்களுக்கும் 117 இடங்களைப் பெண்களுக்கும் பிரித்துக் கொடுத்துப் போட்டியிட வைப்பேன். அதற்கான வேலைகளை இப்போதிருந்தே செய்யத் தொடங்குவோம்.

என்னுடைய நோக்கம் பெரிது. கனவு பெரிது. அவர்களுக்கு அதெல்லாம் இல்லை. ரஜினி வரும்போது இதைவிடப் பெரிய சலசலப்பு இருக்கும்”.

 

Leave a Reply