ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை: திராவிட கழகம் பதில்

ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை: திராவிட கழகம் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் ஆதரவாளர்கள் சமீபத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதாக காலை செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து திராவிடர் கழகத்தினர் விளக்கம் அளித்தபோது ரஜினி மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகள் காலஅவகாசம் கேட்டதால் நாங்கள் மனுக்களை வாபஸ் பெற்றோம் என்றும் எங்கள் புகார் மீது 15 நாட்களுக்குள் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்று நீதிபதி கூறி இருப்பதாகவும் எனவே தாங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் கூறினார்

போலீசாருக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்து அவர்கள் எங்களுடைய புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

எனவே ரஜினி மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் நாங்கள் ஆகத்தான் வாபஸ் பெற்றேன் என்றும் திராவிட கழகத்தினர் விளக்கம் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.