நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு நள்ளிரவில் கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினர்.

மேலும் திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை இம்மாதம் அறிவிக்க உள்ள நிலையில் அவரது இந்த ஆண்டு பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது

ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார்கள்

Leave a Reply