ரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி?

ரஜினி பட இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் மகிழ்திருமேனி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய திரைப்படங்கள் உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் பா. ரஞ்சித்.

இவரது இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

வடசென்னை பாக்சர் குறித்த உண்மை கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மகிழ்திருமேனி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த செய்தி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது

ஏற்கனவே தடம் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply