ரஜினி கமல் போட்டியாக இருப்பதால் அரசியலுக்கு வரவில்லை: பார்த்திபன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலில் குதித்து உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நடிகர்களும் அரசியல்வாதிகள் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் அரசியலில் தற்போது ஈடுபட்டுள்ளனர் அவர்களுக்கு போட்டியாக தான் அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று கூறினார்

மேலும் சினிமாவில் எதையாவது சாதித்து தன்னிறைவு பெற்ற பின்னரே அடுத்த துறைக்கு வர திட்டமிட்டிருப்பதாகவும் எனவே இன்னும் ஒரு சில ஆண்டுகள் சினிமாவுக்கு சேவை செய்துவிட்டு அதன் பின்னர் அரசியலுக்கு வரலாம் என்று முடிவு செய்திருப்பதாகவும் அந்தப் பேட்டியில் தெரிவித்தார்

Leave a Reply