shadow

ரஜினி, கமலை அடுத்து முதல்வருக்கு வாழ்த்து கூறிய பாரதிராஜா

bharathirajaaதமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலமின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமாக வேண்டி ரஜினி, கமல், விஷால், வைரமுத்து உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, முதல்வர் விரைவில் குணமாக இறைவனை பிரார்த்திப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தேர்ந்த நிர்வாகம், துணிச்சல், ஒளிவு மறைவு இல்லாத பட்டவர்த்தனம், பாரதியாரின் சொல்லுக்கு ஏற்ப நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி கொண்ட, தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், மீண்டும் புதுப்பொலிவுடனும், புத்துணர்ச்சியுடனும், முழு ஆரோக்கியத்துடனும் வெளிவந்து ஆட்சிபணிகளை சிறப்புற ஆற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *