ரஜினி கட்சியில் 4 அமைச்சர்கள், 3 எம்பிக்கள்: யார் யார் தெரியுமா?

ரஜினி கட்சியில் 4 அமைச்சர்கள், 3 எம்பிக்கள்: யார் யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அரசியல் கட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போதைய நிலையில் நான்கு அமைச்சர்கள் மற்றும் 3 எம்பிக்கள் ரஜினி கட்சியில் சேர்வது உறுதி என்பது போன்ற தகவல்கள் வந்துள்ளது. ரஜினி கட்சிகள் சேர இருக்கும் நான்கு அமைச்சர்களில் 2 பேர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த செய்தி கசிந்துள்ளதால் ஆளுங்கட்சி தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே வரும் தேர்தல் ரஜினிக்கும் முக ஸ்டாலினுக்கும் இடையே தான் போட்டி என கூறப்பட்டு வரும் நிலையில் அதிமுகவிலிருந்து முக்கிய தலைகள் விலக இருப்பதால் அக்கட்சி தனிமைப்படுத்தப்படும் என்ற அச்சமும் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்களும் முன்னாள் எம்பிக்கள் சிலரும் ரஜினி கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து வருவதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published.