ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என கூறப்பட்டவர் பாஜகவில் இணைகிறார்:

பெரும் பரபரப்பு

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார் என்பது தெரிந்ததே.

மேலும் இவர்தான் ரஜினி ஆரம்பிக்கவிருக்கும் கட்சியின் முதல்வர் வேட்பாளர் என்றும் கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது

டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார் அண்ணாமலை என்றும், உடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இருப்பார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply