ரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்

ரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘ஒரு ரஜினி ரசிகனாக அவர் அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை என்றும் வேலூரில் யார் மக்களவை உறுப்பினராக வரவேண்டும் என்பதை ரஜினி ரசிகர்களால் தீர்மானிக்க முடியாது என்றும் திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்

மேலும் எம்ஜிஆர் பின்னர் எந்த நடிகரும் அரசியலில் பிரகாசித்த்து இல்லை என்றும் எனவே ரஜினிகாந்த் வீண் முயற்சிகள் எடுக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்

கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். யார் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி கூற வேண்டாம் என்று அவர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply