ரஜினியை தாக்கி ஸ்டாலினை புகழ்ந்த சசிகலா சகோதரர்: பெரும் பரபரப்பு

ரஜினியை தாக்கி ஸ்டாலினை புகழ்ந்த சசிகலா சகோதரர்: பெரும் பரபரப்பு

சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடீரென ரஜினியை மறைமுகமாக தாக்கி முக ஸ்டாலினை நேரடியாக புகழாரம் சூட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தபோது ’கர்நாடகாவில் இருந்து வந்த ஒருவர் பெரியாரைப் பற்றி இழிவாகப் பேசுகிறார் என்று ரஜினியை சூசகமாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே தலைவர் முக ஸ்டாலின் மட்டுமே என்றும் அவர்தான் அடுத்த முதல்வர் என்றும் திவாகரன் புகழாரம் சூட்டியுள்ளார்

சசிகலாவின் சகோதரர் திவாகரன் ரஜினியை மறைமுகமாக தாக்கி முக ஸ்டாலின் தான் முதல்வர் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சசிகலா விடுதலை ஆகி வெளியே வந்தால் அவருடைய நிலைப்பாட்டில் மாறுதல் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Leave a Reply