ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வருவோம்: 1988ல் பேசிய பாரதிராஜா

ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வருவோம்: 1988ல் பேசிய பாரதிராஜா

ரஜினிகாந்தை அரசியலுக்கு வர விடமாட்டோம் என்றும் அவர் முதல்வராக வர அனுமதிக்க மாட்டோம் என்றும் நேற்று இயக்குனர் இமயம் பாரதிராஜா பேசியதை பார்த்தோம். ஆனால் இதே பாரதிராஜாதான் கடந்த 1988ம் வருடம் ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வருவோம் என்று பேசியுள்ளார்

சென்னையில் கடந்த 1988ஆம் ஆண்டு நடந்த கூட்டமொன்றில் பாரதிராஜா பேசியது இதுதான்: ரஜினிக்கு எவ்வளவு ஐஸ் வைத்தாலும் புகழுக்கு மயங்காதார். பதவிகளை பற்றி அவர் என்றுமே நினைத்து பார்த்தது இல்லை. ஆனால் காலமும் நேரமும் கூடி வரும் அப்போது அவருக்கு பதவி குறித்து எண்ண வைப்போம் எப்படியும் அவரை ஆட்சிக்கு கொண்டு வருவோம் என்று பேசினார்.

1988 ஆம் ஆண்டு ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு கொண்டு வருவோம் என்று பேசிய அதே பாரதிராஜா இன்று தமிழகத்தை ஒரு தமிழன்தான் ஆளவேண்டும் ரஜினி ஆளக்கூடாது என்று பேசுகிறார். ஏன் 1988 ஆண்டு ரஜினி தமிழன் இல்லை என்பதை பாரதிராஜா தெரியாதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.