ரஜினியையே கலாய்க்கும் நயன்தாரா: ரசிகர்கள் அதிருப்தி!

ரஜினியையே கலாய்க்கும் நயன்தாரா: ரசிகர்கள் அதிருப்தி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தின் 32 வினாடி வீடியோ ஒன்றை சற்று முன்னர் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவில் 12 நிமிடங்கள் மட்டுமே ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அந்த காட்சிகளின் காமெடி ரசிக்கும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் ரஜினியை நயன்தாரா கலாய்க்கும் வகையில் பேசிய வசனங்கள் ரஜினி ரசிகர்களை அதிருப்தி அடைய செய்திருப்பதாக இந்த வீடியோவின் கீழ் பதிவு செய்யப்பட்டு வரும் கமெண்ட்டுக்களில் இருந்து தெரியவருகிறது

ரஜினி காமெடியாக உளறுவதை ’ஐ அம் சாரி எனக்கு உருது தெரியாது’ என்று நயன்தாரா கூறுவதும், அதன் பின்னர் ’இவரை ஒரு நல்ல இ.என்.டி. மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறுவதும் ரஜினியை கலாய்க்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சந்திரமுகி படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

Leave a Reply