ரஜினியின் பேச்சு குறித்து ஸ்டாலின் மெளனம் காப்பது ஏன்?

காஷ்மீர் பிரச்சனையில் மோடி-அமித்ஷாவை ரஜினி புகழ்ந்தது குறித்தும், கிருஷ்ணன் – அர்ஜூனர் என அமித்ஷா மற்றும் மோடியை ஒப்பிட்டது குறித்தும் ரஜினிகாந்த் பேசியதை திமுகவின் ஒருசில பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுகுறித்து கருத்து தெரிவிக்காதது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எஸ்.அழகிரி உள்பட பல தலைவர்கள் ரஜினியை விமர்சனம் செய்து வரும் நிலையில் ப.சிதம்பரம் மட்டும் ரஜினி பேசியது குறித்து இன்னும் வாய் திறக்காதது ஏன் என்றும் அதே நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ப.சிதம்பரமும், முக ஸ்டாலினும் இனிமேலாவது ரஜினி பேசியது குறித்து கருத்து தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply