ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ’தலைவர் 168’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது

இன்றும் நாளையும் இந்த படப்பிடிப்பு நடக்கும் என்றும் இந்த படத்தை பேர்கிரில்ஸ் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

’மேன் வெர்சஸ் வைல்ட்’என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த ஆவணப்படத்தில் ஏற்கனவே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இன்றும் நாளையும் படமாக்கப்படும் இந்த ஆவணப்படபடம் அடுத்த மாதம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *