shadow

ரஜினிக்கு ரெண்டு ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் கொடுத்தேன்; பாரதிராஜா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சம்பளம் இன்று ரூ.50 கோடிக்கும் மேல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு அட்வான்ஸ் தொகை மட்டுமே ரூ.20 கோடியை தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு படத்தில் நடிக்க ஒரு இயக்குனர் ரஜினிக்கு வெறும் ரூ.2 மட்டுமே கொடுத்துவிட்டு படம் முடிந்த பின்னர் முழு தொகையையும் கொடுத்துள்ளார். அந்த இயக்குனர் பாரதிராஜா

சமீபத்தில் பாரதிராஜா அளித்த பேட்டி ஒன்றில் ‘கொடி பறக்குது’ படத்தில் நடிக்க ரஜினியிடம் கால்ஷீட் பெற சென்றபோது ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்க எடுத்து சென்றிருந்தேன். ஆனால் ரஜினி அதை வாங்க மறுத்துவிட்டார். என்னுடைய பாக்கெட்டில் இருந்து ரெண்டே ரெண்டு ரூபாயை மட்டும் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு முழு படத்தையும் நடித்து கொடுத்தார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னரே அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது’ என்று பெருமையுடன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *