ரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்

ரஜினிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி: மனுவை வாபஸ் பெற்ற பெரியார் ஆதரவாளர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியாரை அவமரியாதையாக பேசியதாக அனைத்து அரசியல் கட்சிகளும் குற்றம் சாட்டினார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்த நிலையில் தான் பேசியது சரிதான் எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்

இதனையடுத்து பெரியாரை அவமரியாதை செய்த ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனது இன்னும் ஓரிரு நாளில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ரஜினிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை திராவிடர் விடுதலை கழகத்தினர் சற்றுமுன்னர் வாபஸ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரஜினி மீது ஆவேசமாக புகார் கூறிய திராவிடர் விடுதலை கழகத்தினர் திடீரென வாபஸ் பெற்றது அவருக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது

Leave a Reply