ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல்காந்தி திரித்து கூறுகிறார்: நிர்மலா சீதாராமன்

ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன என்றும், ரஃபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஃபேல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்போம் என உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையில் ரஃபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார் என்றும் ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு ராகுல்காந்தி என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply