யோகிபாபுவின் பன்னிகுட்டி படப்பிடிப்பு முடிந்தது

யோகிபாபு, கருணாகரன் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்து வந்த திரைப்படம் ‘பன்னிக்குட்டி’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் வெறும் நான்கே மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்று இந்த படத்தின் நிறைவு நாளை அடுத்து படக்குழுவினர் ஒரு புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என இயக்குனர் அனுசரன் தெரிவித்துள்ளார்.

ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘K’ என்கிற கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லட்சுமி ப்ரியா , ராமர் , ‘பழைய ஜோக்’ தங்கதுரை உள்பட பலர் நடித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *