யோகாவுக்கு செலவு செய்யும் கோடிகளை இதற்கு செலவிடலாமே!

யோகாவுக்கு செலவு செய்யும் கோடிகளை இதற்கு செலவிடலாமே!

யோகா நிகழ்ச்சிக்காக நேற்று கோடிக்கணக்கில் அரசு செலவு செய்திருக்கும் நிலையில் நேற்று பாட்னா இளைஞர்கள் ஒரு உருப்படியான காரியம் செய்துள்ளனர்.

ஜன் அதிகர் சத்ரா பரிஷீத் என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சாலையில் உட்கார்ந்து ஷூ பாலிஷ் செய்து அதில் கிடைத்த பணத்தை AES என்ற நோயால் பாதித்த குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு உதவி செய்துள்ளனர்.

ஒரே ஒரு நாள் யோகா செய்வதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் அரசு, இதுபோன்றவைகளுக்கும் செலவு செய்ய முன்வர வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நடவடிக்கை என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்

Leave a Reply