யூரோ கால்பந்து முதல் போட்டியில் இத்தாலி வெற்றி!

இன்று முதல் யூரோ கால்பந்து போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் துருக்கி அணியை இத்தாலி அணி வென்றுள்ளது

இத்தாலி அணி 3 கோல்கள் போட்ட நிலையில் துருக்கி அணி ஒரு கோல் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய அடுத்த போட்டியில் வேல்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் அணிகளும் டென்மார்க் மற்றும் பின்லாந்து நாடுகளின் அணிகளும் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

யூரோ கால்பந்து போட்டியில் அணிகள் 6 பிரிவுகளின் அணிகள் பின்வருமாறு:

குரூப் A: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து
குரூப் B: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து
குரூப் C: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா
குரூப் D: இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக் குடியரசு
குரூப் E: ஸ்பெயின், போலந்து, ஸ்வீடன், ஸ்லோவேகியா
குரூப் F: ஹங்கேரி, போர்ச்சுக்கல், பிரான்ஸ், ஜெர்மனி.