யூடுபியில் 50 மில்லியன் பார்வைகளை கடந்தது குட்டிஸ்டோரி பாடல்

இளைய தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல தடைகளுக்கு பிறகு கடந்த பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, OTT யில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா காரணமாக ஊரடங்கு வந்த நிலையில் பல மாதங்களாக திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகாத நிலையில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.

இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு முன் யூடியூபில் வெளியிடப்பட்ட குட்டி ஸ்டோரி பாடல் தற்போது 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது தற்போது விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.