செல்வராகவன் இயக்கியுள்ள இரண்டாம் உலகம் படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது, யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் நவ., 22ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கின்றனர். மயக்கம் என்ன படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கியுள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா-அனுஷ்கா ஹீரோ-ஹீரோயினாக நடித்துள்ளனர்.

முற்றிலும் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இயக்கி வந்தார் செல்வராகவன். கொடிய விலங்குகளுக்கு மத்தியில் ஜார்ஜியா காட்டுக்குள் எல்லாம் இரண்டாம் உலகம் படத்தை கஷ்டப்பட்டு எடுத்துள்ளார் செல்வராகவன். அவதார் படத்தில் வரும் விலங்குகள் போன்று இந்தப்படத்திலும் கொடிய விலங்குகள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு முன்னணி இசை ஹாரிஸ் ஜெயராஜ் அமைத்துள்ளார், பின்னணி இசை அனிருத் அமைத்துள்ளார். பி.வி.பி. சினிமாஸ் இப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் உலகம் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் இரண்டாம் உலகத்திற்கு யு சான்று கொடுத்தனர். படத்திற்கு யு சான்று கிடைத்த மகிழ்ச்சியில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர். நவ., 22ம் தேதி இரண்டாம் உலகம் படம் உலகம் முழுக்க ரிலீஸாகின்றது.

Leave a Reply